அஜித் நடிப்பில் பில்லா 3 படம் தயாராகிறதா?- விஷ்ணுவர்தன் ஓபன் டாக்

அஜித் நடிப்பில் பில்லா 3 படம் தயாராகிறதா?- விஷ்ணுவர்தன் ஓபன் டாக்

அஜித்தின் திரைப்பயணத்தில் நிறைய வெற்றிப்படங்கள் உள்ளது.

அப்படி அவர் நடித்த படங்களில் செம ஹிட்டான ஒரு படம் பில்லா. படத்தின் கதை, அஜித்தின் ஸ்டைல், லுக், மாஸ், இசை என எல்லாமே படத்தில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

இடையில் வந்த கார் சேஸிங் சீன் எல்லாம் தரமாக இருக்க படமே செம ஹிட்டானது. இதன் 2ம் பாகம் வந்தது, ஆனால் முதல் பாகத்தின் அளவிற்கு ஹிட் பெறவில்லை.

அண்மையில் ஒரு பேட்டியில் இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் பில்லா 3 வருமா என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், அப்படி ஒரு பிளான் இதுவரை இல்லை, சில படங்களை மீண்டும் எடுக்காமல் இருப்பதே அதன் தனித்தன்மையை தக்கவைக்கும், பில்லா படமும் அப்படியே இருக்கட்டும் என கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES