தல அஜித் படம் படைத்த சாதனை.....! இமான் பதிவிட்டுள்ள ட்வீட்....!

தல அஜித் படம் படைத்த சாதனை.....! இமான் பதிவிட்டுள்ள ட்வீட்....!

தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்பட பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

இயக்குனர் சிவா மற்றும் நடிகர் அஜித் நான்காவதாக கைகோர்த்த திரைப்படம் விஸ்வாசம் ஆகும். இப்படத்தில் நயன்தாரா, விவேக், யோகிபாபு, ரோபோசங்கர், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள்.
சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருந்த இத்திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருப்பார். அண்மையில் இப்படத்தின் இசைக்காக "சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது" இமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2019-ல் பொங்கலுக்கு வெளியான இப்படம் உலகளவில், 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. 14 இசைக்கோர்வைகள் இப்படத்தின் பாடல்களை, கவிஞர்கள் தாமரை, விவேகா, யுக பாரதி, அருண் பாரதி உள்ளிட்டோர் எழுதியிருந்தார்கள்.

இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படத்தில் வந்த 'அடிச்சுதூக்கு’ பாடல் யுடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது. இதை இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அஜித் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES