வெற்றுடம்பில் 'வெந்து தணிந்தது காடு' சிம்பு: வைரல் புகைப்படம்

வெற்றுடம்பில் 'வெந்து தணிந்தது காடு' சிம்பு: வைரல் புகைப்படம்

சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் இந்த போஸ்டரை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாவது லுக் என்று கூறப்படும் போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளது .சிம்பு வெற்று உடம்புடன் வெறும் லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு இருக்கும் இந்த போஸ்டர் அட்டகாசமாக இருப்பதாக அவருடைய ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த படத்தில் மீண்டும் ஒரு கிராமத்து இளைஞராக சிம்பு நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி இந்த படத்திற்காக மேலும் அவர் உடல் எடை குறைத்து இளைத்துள்ளார் என்பது இந்த இரண்டாவது போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு ’வெந்து தணிந்தது காடு’ படக்குழுவினர் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படம் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

LATEST News

Trending News