தல, தளபதி சந்திப்பு நடந்தது இதற்காகத்தானா? ரசிகர்களை கொண்டாட வைக்கும் தகவல்!
தல தோனி மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரின் எதிர்பாராத சந்திப்பு இன்று இணையதளங்களில் ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சில மணிநேரங்களுக்கு முன்னர் விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தார் தல தோனி. ஆரம்பகட்ட வரவேற்பு முடிந்தது, தோனி, விஜய் ஆகிய இருவரும் சில நிமிடங்கள் கேரவனில் பேசியதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த பேச்சுவார்த்தையின் தகவல் தற்போது கசிந்துள்ளது.
ஐபிஎல் போட்டியின் பயிற்சிக்காக தல தோனி சென்னை வந்திருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு விளம்பரப் படம் எடுக்கப் போவதாகவும் அதில் தளபதி விஜய்யை நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்த தோனி வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதேபோல தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தில் தல தோனி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது விருப்பத்தையும் தெரிவித்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர படத்தில் விஜய்யும், ’பீஸ்ட்’ படத்தில் தோனியும் நடிப்பது குறித்து அறிவிப்பு வந்தால் தல, தளபதி ரசிகர்களுக்கு அதைவிட வேறு மகிழ்ச்சியான செய்தி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இது நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.