'பீஸ்ட்' படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஒரே இரவில் 500கிமீ பயணம் செய்த பிரபல நடிகர்!
தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஒரே இரவில் 500 கிலோ மீட்டர் பயணம் செய்த பிரபல நடிகர் ஒருவரின் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’பீஸ்ட்’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவிலும், இரண்டாவது கட்டத்தில் சென்னையிலும் நடந்து முடிந்த நிலையில் தற்போது சென்னையில் மீண்டும் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் முந்தையநாள் ராமேஸ்வரத்தில் அருண்விஜய் நடிப்பில் ஹரி இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் அடுத்த நாள் அவர் ராமேஸ்வரத்தில் இருந்து ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சுமார் 500 கிலோமீட்டர் இரவு முழுவதும் பயணம் செய்து, மறுநாள் காலையில் சென்னையில் ’பீஸ்ட்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.
விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணாதாஸ், புகழ், யோகிபாபு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.