'சார்பாட்டா பரம்பரை 2': பா ரஞ்சித் கூறிய ஆச்சரிய தகவல்!
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலரது நடிப்பில் உருவான ’சார்பாட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டினர் என்பதும் அதேபோல் அரசியல்வாதிகளும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மாபெரும் வெற்றி பெற்ற தமிழ் திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வரும் நிலையில் ’சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்பட்டது
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் ’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் வைக்க முடியாத சில விஷயங்களை முன் கதையாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் ’சார்பாட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை 1925ஆம் ஆண்டு ஆரம்பிப்பது போல் இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த படத்தை வெப்தொடர் அல்லது திரைப்படமாக எடுக்கும் எண்ணம் உள்ளது என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்
’சார்பாட்டா பரம்பரை’ இரண்டாம் பாகத்தில் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் யார் யாராக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.