நவரசா: கார்த்திக் நரேனின் 'அக்னி'

நவரசா: கார்த்திக் நரேனின் 'அக்னி'

நவரசா ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள ஒரு பகுதி அக்னி. கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, பிரசன்னா, சாய்சித்தார்த் மற்றும் பூர்ணா நடிப்பில் ரான் எதான் யோஹன் இசையில் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் கார்த்திக் நரேன் ஒரு விஞ்ஞானபூர்வமான கதையை ஒரு குறும்படமாக தந்துள்ளார். விஞ்ஞானி அரவிந்த்சாமி ஆபத்தான ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடித்த நிலையில் அவற்றை நிரூபிக்க இஸ்ரோவில் இருந்து தனது நண்பர் பிரசன்னாவை அழைப்பதில் இருந்து கதை தொடங்குகிறது

இந்த இருவருக்கும் இடையே உள்ள அறிவியல் உரையாடல் மற்றும் வியக்கத்தக்க விஞ்ஞான ஆச்சரியங்கள் ஆங்காங்கே தெரிகிறது. அரவிந்த்சாமியின் மனைவியாக பூர்ணா நடித்துள்ளார் என்பதும், அவரது நடிப்பும் கேரக்டரும் ஒரு மர்மமாகவே காட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கார்த்திக் நரேனின் ’துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தில் வருவது போன்றே கிளைமாக்சில் ஒரு எதிர்பாராத டுவிஸ்ட் என்பது மட்டுமே கார்த்திக் நரேன் திறமையாக தெரிகிறது. மேலும் ஆங்காங்கே சில ஹாலிவுட் படங்களையும் ஞாபகப்படுத்துகிறது.

2 கேரக்டர்கள், ஒரே லொகேஷனில் 30 நிமிட குறும்படத்தில் 25 நிமிடங்கள் பேசுகிறார்கள். மேலும் கேரக்டர்களின் பெயர்கள் விஷ்ணு, கிருஷ்ணா, கல்கி என்று வைத்ததன் குறியீடுகளையும் புரிந்து கொள்ளலாம். மொத்தத்தில் சயின்ஸ் பிக்சன் கதையில் ஒரு அருமையான டுவிஸ்ட் உடன் கூடிய கிளைமாக்ஸ் திருப்பத்தை ரசிக்கலாம்.

LATEST News

Trending News

HOT GALLERIES