பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அஜித்தின் ரீல்மகள் அனிகாவா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அஜித்தின் ரீல்மகள் அனிகாவா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..

தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது டி ஆர் பிக்காக போட்டிகள் கடுமையாக இருந்து வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஒளிப்பரப்பு செய்து வெற்றியை கண்டது.

அதேபோல் மற்றொரு பிரபல் தொலைக்காட்சி நடிகர் விஜய் சேதுபதி, தமன்னாவை வைத்து தமிழ், தெலுங்கு என மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது. தற்போது அதையெல்லாம் புறட்டிபோட ஜீ தமிழ் தொலைக்காட்சி சர்வைவர் என்ற மிகப்பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஆரம்பிக்கவுள்ளது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பெரிய பிரபலம் ஒருவர் தான் தொகுத்து வழங்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. அதற்காக வெளிநாட்டில் செட் அமைத்து கடுமையாக போட்டிக்களத்துடன் நிகழ்ச்சி துவங்கவுள்ளதாம். அதற்கான போட்டியாளர்கள் தேர்வில் நிகழ்ச்சி குழு இருந்து வருகிறது. இந்நிலையில், டிரெண்டிங்கில் இருக்கும் பிரபலங்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தும் நிகழ்ச்சிக்குழு,

அந்நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால், விசுவாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்த அனிகாவை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டோஹூட் என ரசிகர்களை ஈர்த்து வந்த அனிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதன்முதலில் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளவிருக்கிறாராம் அனிகா சுரேந்திரன்.

LATEST News

Trending News