விஜய்யை அடுத்து தனுஷ்: கார் வரி வழக்கு விசாரணை!
தளபதி விஜய் வாங்கிய வெளிநாட்டு காரின் நுழைவு வரி குறித்த வழக்கு கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்தநிலையில் விஜய்யை அடுத்து தற்போது தனுஷின் வெளிநாட்டு காரின் நுழைவு வரி குறித்த வழக்கு குறித்த செய்தி வெளிவந்துள்ளது
நடிகர் தனுஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து கார் ஒன்றை இறக்குமதி செய்தார். அந்த காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் நுழைவு வரியாக செலுத்த வேண்டும் என வணிகவரித் துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தனுஷ் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததால் இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது