பா ரஞ்சித் படத்தில் 3வது முறையாக ஹீரோவாக நடிக்கும் நடிகர்

பா ரஞ்சித் படத்தில் 3வது முறையாக ஹீரோவாக நடிக்கும் நடிகர்

பா ரஞ்சித்தின் இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் ஒருவர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் அறிமுகமான ’அட்டகத்தி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர் தினேஷ். இந்த படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து பா ரஞ்சித் தயாரிப்பில் உருவான ’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படத்தில் தினேஷ் ஹீரோவாக நடித்தார் என்பதும் இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோக பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’கபாலி’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் தினேஷ் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பா ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தில் மீண்டும் தினேஷ் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ரஞ்சித்தின் உதவியாளர்களில் ஒருவரான சுரேஷ் மாரி என்பவர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தற்போது ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை பா ரஞ்சித் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் அசோக்செல்வன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News