குட்டி ஸ்டோரி பாடலை பின்னுக்கு தள்ளிய தல அஜித்தின் 'நாங்க வேற மாறி' - அட, இது வேற மாறி
எச். வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.
சில வாரங்களுக்கு முன் இப்படத்தில் இருந்து First லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில், நேற்று இப்படத்தில் இருந்து 'நாங்க வேற மாதிரி' எனும் லிரிகள் பாடல் வீடியோ வெளியானது.
நேற்று இரவு 10 மணிக்கு வெளியான இப்பாடல் தற்போது வரை சுமார் 6 மில்லியன் பார்வையாளர்களை குவித்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்று இருந்த, குட்டி ஸ்டோரி பாடல் லிரிகள் வீடியோ, ரசிகர்களிடம் இருந்து சுமார் 107,922 கமெண்ட்களை பெற்று இருந்தது.
இந்நிலையில் அஜித்தின் 'நாங்க வேற மாதிரி' லிரிகள் பாடல் வீடியோ, அதைவிட அதிகமான கமெண்ட்களை பெற்று குட்டி ஸ்டோரி பாடலை பின்னுக்கு தள்ளியுள்ளது.