மீண்டும் ஆன்மீக சுற்றுப்பயணமா? சிம்புவின் வைரல் புகைப்படம்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு சபரிமலை, காசி, உள்பட ஒரு பெரிய ஆன்மீக சுற்றுலா வந்து சென்று வந்தார் என்றும் அதனை அடுத்து அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டு விட்டு படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார் என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது திரையுலகில் பிஸியாக இருக்கும் சிம்பு மீண்டும் ஒரு கோவிலுக்கு சென்று வழிபட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள முருதீஸ்வரர் என்ற கோவிலுக்கு சிம்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்று இறைவனை வழிபட்டார். இதனை அடுத்து அவர் மீண்டும் ஆன்மிகச் சுற்றுலாவுக்கு கிளம்பி விட்டார் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது
சிம்பு தற்போது ’மாநாடு’ திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு கௌதம் மேனன் இயக்கும் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பதும், இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவர் ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.