லிங்குசாமியின் அடுத்த படத்தில் இணைந்த அஜித் பட நடிகை!
பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்திநேனி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தில் தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஆதி வில்லனாக நடித்து வருகிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த படத்தில் அஜீத் நடித்த ’ஆரம்பம்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை அக்ஷரா கவுடா இணைந்துள்ளார். இவர் ஆதிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆதி இந்த படத்தில் வில்லனாக நடித்தாலும் அவருக்கும் இந்த படத்தில் ரொமாண்டிக் காட்சிகள் இருப்பதாகவும் ஆதி மற்றும் அக்ஷரா கவுடா ரொமான்ஸ் காட்சிகள் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஆதி மற்றும் அக்ஷரா கவுடா ஆகிய இருவரும் மதுரை தமிழ் மற்றும் கடப்பா தெலுங்கு மொழி பேசும் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.