'காசேதான் கடவுளே' ரீமேக்: ஒரிஜினலில் இல்லாத கேரக்டரில் நடிக்கும் புகழ்!
கடந்த 1972ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான மாபெரும் வெற்றி திரைப்படம் ’காசேதான் கடவுளடா’. சூப்பர் ஹிட் திரைப்படமான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்டது என்பதும் இந்த படத்தில் முத்துராமன், எம்ஆர்ஆர் வாசு, தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள் என்பதும் அதேபோல் லட்சுமி, மனோரமா, ரமா ப்ரியா, சச்சு, ஜெயகுமாரி ஆகியோர் நடித்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 49 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் ரீமேக் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மிர்ச்சி சிவா நடித்து வருகிறார் என்பதும் இயக்குனர் கண்ணன் இந்த படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் இணைந்தார் என்பது தெரிந்ததே. அவர் இந்த படத்தில் ஒரு கம்ப்யூட்டர் ஹேக்கராக நடிக்க இருப்பதாகவும் நாயகன் சிவாவுக்கு அவரும் உதவி செய்வது போன்ற கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனை இயக்குனர் கண்ணன் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரிஜினல் ’காசேதான் கடவுளடா’ திரைப்படத்தில் புகழ் கேரக்டர் இல்லை என்பதும் இந்த கேரக்டர் புதிதாக ரீமேக்கில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 10ஆம் தேதி சென்னையில் தொடங்குவதாகவும் அதனை அடுத்து இந்த படம் விறுவிறுப்பாக முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பிரியா ஆனந்த் இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்றும் மேலும் குக் வித் கோமாளி ஷிவாங்கி, ஊர்வசி, யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.