கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.. ஷாக்கிங் நியூஸ்
நடிகை யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் நேற்று இரவு காரில் பயணம் செல்லும் . பொழுது, மாமல்லபுரம் அருகே, அவர் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மூவருக்கும் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடிகை யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
மேலும் நடிகை யாஷிகா மீது அதிவேகமாக கார் ஓட்டியதற்கும், உயிர்சேதம் ஏற்படுத்தியதுக்கும், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.