மீண்டும் திரைப்படத்தை தயாரிக்கவுள்ள ஏ. ஆர். முருகதாஸ், யார் ஹீரோ தெரியுமா?
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா அளவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் தான் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ்.
இவர் அஜித், சூர்யா, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் தளபதி 65 படத்தை கைவிடப்பட்டதை தொடர்ந்து இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ், ஒரு பெரிய பட்ஜெட்டில் அனிமேஷன் படத்தை உருவாகி வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் எம். சரவணன் இயக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இவரின் எங்கேயும் எப்போதும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தில் நடிகர்கள் சரத்குமார் மற்றும் சந்தீப் கிஷன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.