அஜித்தின் வலிமை படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் இவர் யார் என தெரியுமா?- அட இவரா
தமிழில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் ஒரு பெரிய நடிகரின் படம் என்றால் அஜித்தின் வலிமை படத்தை தான்.
கடந்த வருடத்திற்கு முன்பே படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது, கொரோனா காரணமாக எல்லாம் அப்படியே நிறுத்தப்பட்டது. இப்போது பட வேலைகள் வேகமாக நடக்க இவ்வருட இறுதியில் படம் வெளியாகிவிடும் என கூறப்படுகிறது.
வலிமை படத்தில் அஜித் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று லீக் ஆகி இருந்தது, அதில் அஜித் தங்கையாக ஒருவர் நடிக்கிறார்.
அவரை எல்லோரும் புதுமுகம் என நினைக்கலாம், ஆனால் அவர் நாம் ஒரு ஹிட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக பார்த்தவர் தான்.
அவர் வேறு யாரும் இல்லை நடிகை சுனைனா பாதாம் தான். 90 கால கட்டத்தில் சாமி படமான அம்மன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் இவர்.