யூடியூபிடம் கோல்டன் பட்டன் பெற்ற ஷிவாங்கி

யூடியூபிடம் கோல்டன் பட்டன் பெற்ற ஷிவாங்கி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானாலும் குக் வித் கோமாளி மூலம் புகழ் உச்சியை தொட்ட ஷிவாங்கி சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை பெற்றுள்ளார். அவர் எந்த வீடியோ போட்டாலும் வைரல் பட்டியலில் இடம் பெற்றுவிடும். அந்த வகையில் தன்னுடைய யூடியூப் சேனலில் அவ்வப்போது போடும் சில வீடியோக்கள் டிரெண்டிங்கிலும் இடம் பெறும். இந்நிலையில் அவர் சொந்தமாக வைத்துள்ள யூடியூப் சேனல் தற்போது 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கடந்துள்ளது. இதனால் யூடியூப் அவருக்கு கோல்டன் பட்டனை பரிசளித்துள்ளது. இதனை வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ள ஷிவாங்கி, ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

மேலும் கடந்த 2017-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய ஷிவாங்கி 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1 மில்லியன் பாலோயர்களைப் பெற்றார். இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களில் 2 மில்லியன் பேர் ஷிவாங்கியை பின் தொடர ஆரம்பித்திருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது 3 மில்லியன் ரசிகர்கள் ஷிவானியை பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது யூடியூப் சேனலை 1.5 மில்லியன் மக்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஷிவாங்கி தனது குறும்புத்தனமான செயல்கள் அடங்கிய வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES