நடிப்பில் ஆர்யாவையே பின்னுக்கு தள்ளிய டான்சிங் ரோஸ்: யார் இவர்?

நடிப்பில் ஆர்யாவையே பின்னுக்கு தள்ளிய டான்சிங் ரோஸ்: யார் இவர்?

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவான ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் நேற்று அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த ஆர்யா மட்டுமின்றி அனைத்து கேரக்டர்களும் கச்சிதமாக கேரக்டர்களுக்கு பொருந்தி நடித்திருந்தனர். குறிப்பாக இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள துஷாரா, பசுபதி, சந்தோஷ் பிரதாப், கலையரசன், ஜான் விஜய் ஆகிய அனைவருமே தங்களது கேரக்டரின் முக்கியத்துவத்தை உணர்ந்து இயல்பாக நடித்து இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பவர் ஷபீர். இவர்தான் இந்த படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கேரக்டரில் நடித்திருப்பார் என்பதும், ஆர்யாவுடனான சண்டையில் ஆர்யாவை பின்னுக்கு தள்ளிவிட்டு ரசிகர்களை கவர்ந்தவர் என்பதும், அனைவரும் யார் இவர்? என கேட்க வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டான்சிங் ரோஸ் கேரக்டரில் நடித்திருந்த இவரது பெயர் இவரது முழுப்பெயர் சபீர் கல்லரக்கல். இவர் ஒரு நாடக கலைஞர் என்பதும் பார்க்கவுர் என்று அழைக்கப்படும் சண்டை பயிற்சியில் தேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே தான் இவரை இயக்குனர் பா ரஞ்சித், டான்சிங் ரோஸ் கேரக்டரில் நடிக்க வைத்தார் என்பதும் இந்த கேரக்டருக்காக ஷபீர் முறையாக பாக்சிங் பயிற்சி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES