ஓடிடியில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் இன்னொரு படம்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் இன்னொரு படம்!

விஜய் சேதுபதி நடித்த ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே. அதேபோல் விஜய் சேதுபதி நடித்த ’துக்ளக் தர்பார்’, ‘கடைசி விவசாயி’ மற்றும் நீண்ட காலமாக ரிலீசாகாமல் இருக்கும் ’மாமனிதன்’ ஆகிய திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்த மேலும் ஒரு திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விஜய் சேதுபதி, டாப்ஸி முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் நேரடியாக வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல நடிகர் சுந்தர்ராஜன் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கிய இந்தப் படத்தில் ராதிகா, தேவதர்ஷினி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES