தோழியுடன் கிளாமர் உடையில் சமந்தா: வைரல் புகைப்படம்!
தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையான சமந்தா தனது தோழியுடன் கிளாமர் உடையில் தோன்றும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஒரு சில மணி நேரங்களில் 16 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும், அதில் இயக்குனர் அட்லீயின் மனைவி ப்ரியா அட்லியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் பிரபல பேஷன் டிசைனர் மற்றும் பிட்னஸ் பயிற்சியாளருமான ஷில்பா ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2004ஆம் ஆண்டு மிஸஸ் இந்தியா என்ற பட்டத்தை வென்றவர் என்பதும், ஷில்பா ரெட்டியும் சமந்தாவும் கடந்த பல ஆண்டுகளாக நெருங்கிய தோழிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஷில்பா ரெட்டி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு சமந்தா தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.