வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் ஆன்ட்ரியா!
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ’வடசென்னை’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது வெற்றிமாறனுடன் மீண்டும் ஆண்ட்ரியா இணைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனமான கிராஸ்ரூட் கம்பெனி தயாரித்து வரும் படத்தை அவருடைய உதவியாளர் ஒருவர் இயக்கி வருவதாகவும், இந்த படத்தின் நாயகியாக ஆண்ட்ரியா நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மிஷ்கின் இயக்கும் ’பிசாசு 2’ சுந்தர் சி இயக்கி வரும் ’அரண்மனை 3’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார் என்பதும் தமிழ் சினிமாவில் மீண்டும் பிசியாக ஆண்ட்ரியா நடித்து வரும் நிலையில் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு அவருடைய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.