தடுப்பூசி போடும்போது சினேகா போட்ட டிராமா: நடிகர் பிரசன்னா வெளியிட்ட வீடியோ வைரல்!

தடுப்பூசி போடும்போது சினேகா போட்ட டிராமா: நடிகர் பிரசன்னா வெளியிட்ட வீடியோ வைரல்!

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான பிரசன்னா மற்றும் சினேகா ஆகிய இருவரும் நேற்று முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்ற செய்தியைப் பார்த்தோம். இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மனைவி சினேகா தடுப்பூசி போடும்போது போட்ட ட்ராமா குறித்த வீடியோவை பதிவு செய்துள்ளார். ஊசி போடும் சினேகா பயந்த காட்சிகள் மற்றும் அவர் நாற்காலியில் மாறிமாறி உட்கார்ந்த காட்சிகள் பிரசன்னா வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ளன. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தடுப்பூசி போடும்போது சினேகாவின் டிராமாவை பாருங்கள் என பிரசன்னா பதிவு செய்த இந்த வீடியோவுக்கு ரசிகர்களின் நகைச்சுவையான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சினேகா தற்போது அசோக்செல்வன், ரிதுவர்மா நடிப்பில் உருவாகி வரும் ‘வான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும், பிரச்சன்னா தற்போது விஷாலின் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES