'வலிமை' ரிலீசுக்கு முன்பே 'தல 61' படப்பிடிப்பு தொடக்கமா?
தல அஜித் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அல்லது அதற்கு முன் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் இன்னும் ரிலீஸ் தேதியை முடிவு செய்யவில்லை என்பதும் படப்பிடிப்பு முடிவடைந்து சென்சார் சான்றிதழ் பெற்ற பின்னரே ரிலீஸ் தேதியை முடிவு செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தையும் எச்.வினோத் தான் இயக்க இருக்கிறார் என்றும் போனிகபூர் தயாரிக்க உள்ளார் என்றும் ஏற்கனவே வெளியான செய்திகளைப் பார்த்தோம். இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. போகிற போக்கை பார்த்தால் ’வலிமை’ படத்தின் ரிலீஸுக்கு முன்னரே ’தல 61’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.