கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு!

கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு!

நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று தொடங்கியதை அடுத்து படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரான கருணாஸ் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக அரசியலில் பிஸியாக இருந்த கருணாஸ், கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

இதனை அடுத்து தற்போது மீண்டும் அவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். கருணாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் ’ஆதார்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ராம்நாத் பழனிகுமார் என்ற ஒரு இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’திருநாள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் அருண்பாண்டியன், மனிஷா யாதவ், ரித்விகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் தேவா இசையில், மனோ நாராயணன் ஒளிப்பதிவில், ஜான் பிரிட்டோ படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LATEST News

Trending News