பிரபல நடிகர் படத்தில் இணைந்த பிக்பாஸ் சம்யுக்தா
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமான சம்யுக்தா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இயக்குநரும், நடிகருமான சசிகுமார், டி.இமான் இசையில், அறிமுக இயக்குநர் எம்.ஹேமந்த் குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கான பாடல் பதிவுடன் இன்று பூஜை போடப்பட்டுள்ளது.
பெயரிடப்படாத இந்த புதிய படத்தை கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மன் குமார் புரொடக்சன் 5வது படைப்பாக மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.
கிராமத்து பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.