தனுஷின் 'நானே வருவேன்' படத்தின் புதிய டைட்டில் இதுதானா?
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் ’நானே வருவேன்’ என்று உறுதி செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் டைட்டில் மாற இருப்பதாகவும் டைட்டில் மட்டுமின்றி கதையும் மாற இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது தனுஷ் - செல்வராகவன் மீண்டும் இணையும் படத்தின் புதிய டைட்டில் ’ராயன்’ என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது
மேலும் இந்த படம் மூன்று அண்ணன் தம்பிகள் குறித்த கதையம்சம் கொண்டது என்றும் ராயபுரத்தில் நடக்கும் கதை என்றும், இதில் மூன்று சகோதரர்களில் ஒருவர் தான் தனுஷ் என்றும் இன்னொரு சகோதரராக நடிக்க விஷ்ணு விஷாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
மேலும் ஏற்கனவே இந்த திரைப்படம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கதை டைட்டில் மற்றும் நடிகர்கள் மாற்றப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தேதியும் மாற்றப்பட்டு உள்ளதாகவும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
’ராயன்’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.