விஜய், தனுஷை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் செய்யவுள்ள புதிய முயற்சி! வெளியான சூப்பர் தகவல்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர். இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
மேலும் இவர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாக்டர் திரைப்படம் OTT நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அடுத்து சிவகார்த்திகேயன் டான், அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடிக்கவுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் KV இயக்கத்தில் தமிழ் - தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அனுதீப் KV இயக்கத்தில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான Jathi Ratnalu என்ற திரைப்படம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.