'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு: நாளை கிளம்புகிறார் ரஜினி!

'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு: நாளை கிளம்புகிறார் ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் மேற்கு வங்கத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனை அடுத்து ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் நாளை மேற்கு வங்கம் செல்ல இருப்பதாகவும் அங்கு இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேற்குவங்கத்தில் ’அண்ணாத்த’ படப்பிடிப்பில் நான்கு நாட்கள் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்றும் அதன் பிறகு சென்னை திரும்பும் அவர் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலுக்கு இனி வரப்போவது இல்லை என உறுதிபட நேற்று தெரிவித்த ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றத்தையும் கலைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அடுத்தடுத்து ரஜினியின் படங்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News