'விக்ரம்-வேதா' இயக்குனர்களுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா! அதிகாரபூர்வ அறிவிப்பு!
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’விக்ரம் வேதா’. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது என்பதும் இந்த திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் ஓடிடி பிளாட்பாரத்திற்காக வெப்தொடர் ஒன்று உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தொடரின் நாயகனாக நடிகர் எஸ்ஜே சூர்யா நடிக்க உள்ளார்
அமேசான் பிரைம் ஓடிடிக்காக உருவாக இருக்கும் இந்த தொடரை ஆண்ட்ரூ என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனி நடித்த ’கொலைகாரன்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் அடுத்த வாரம் இந்த தொடரின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.