ஒன்று கூடிய 80களின் நாயகிகள்: யார் யார் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

ஒன்று கூடிய 80களின் நாயகிகள்: யார் யார் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

கடந்த 80கள் மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகைகள் தற்போது ஒன்று கூடி மகிழ்ச்சியாக மகிழ்ச்சியாக வார இறுதியை கழித்த அனுபவம் குறித்த புகைப்படங்களை நடிகை ராதிகா சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

இந்த வார இறுதியில் 80களின் தோழிகளுடன் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ஏகப்பட்ட மலரும் நினைவுகள் மற்றும் சந்தோசங்கள் என்றும் ராதிகா சரத்குமார் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அம்பிகா, ராதா, சுகாசினி, குஷ்பு, பூர்ணிமா ஜெயராமன் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த எண்பதுகளில் இவர்கள் அனைவருமே முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் என்பதும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பிரபலங்களின் படங்களில் இவர்கள் அனைவருமே ஹீரோயின்களாக நடித்தவர்கள் என்பதும் தெரிந்ததே.

LATEST News

Trending News