மகாசமுத்திரம் நிறைவு : 8 ஆண்டுகளுக்கு பின் வருகிறேன் : சித்தார்த்

மகாசமுத்திரம் நிறைவு : 8 ஆண்டுகளுக்கு பின் வருகிறேன் : சித்தார்த்

ஷங்கரின் பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த் அதன்பிறகு தமிழ், மட்டுமின்றி தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் தெலுங்கு படங்களில் நடிப்பதை அவரே குறைத்துக் கொண்டு தமிழில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கினார் சித்தார்த். இந்தநிலையில் தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள மகா சமுத்திரம் என்ற படத்தில் சர்வானந்துடன் இணைந்து நடித்துள்ளார் சித்தார்த். அதிதிராவ், அனு இம்மானுவேல் நாயகிகளாக நடித்துள்ள இப்படம் ஆகஸ்டு 19-ந்தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுதொடர்பான போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்து, ‛‛ 8 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் தெலுங்கு ரசிகர்களை சந்திக்கப்போகிறேன். கடவுள் அருளாலும், அரசு அனுமதி அளித்தால் விரைவில் மகா சமுத்திரம் படம் திரைக்கு வரும் பதிவிட்டுள்ளார் சித்தார்த்.

LATEST News

Trending News