அஜித்தின் ‘வலிமை’ படத்தில் விக்னேஷ் சிவன்

அஜித்தின் ‘வலிமை’ படத்தில் விக்னேஷ் சிவன்

இயக்குனரும், பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன், அஜித்தின் வலிமை படத்தில் பணியாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இன்று வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து வெளியான அப்டேட்டுகளால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில், வலிமை படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பணியாற்றி உள்ளது தெரியவந்துள்ளது. அவர் இப்படத்தில் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜய்க்கு பாடல் எழுதிய விக்னேஷ் சிவன், தற்போது வலிமை படத்தில் அஜித்துக்காக பாடல் எழுதி உள்ளார். அவர் அஜித் படத்திற்கு பாடல் எழுதுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

LATEST News

Trending News