வலிமை படத்தில் ஓப்பனிங் சாங் யார் பாடியுள்ளார் தெரியுமா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
அந்த வகையில் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர், ஆனால் அவ்வப்போது தல அஜித்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி வருவதால் அது அவர்களுக்கு ஆறுதலாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வலிமை படம் குறித்து ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது, ஆம் வலிமை படத்தில் ஓப்பனிங் சாங் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தான் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த ஒரு தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.