ரசிகர்கள் எதிர்பார்க்கும் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் அக்னிச்சிறகுகள்.
இப்படத்தில் அக்ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
மூடர்கூடம் படத்தை இயக்கிய இயக்குனர் நவீன், இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை, நடிகர் அருண் விஜய் வெளியிட்டுள்ளார்.
அதன்படி அக்னிச் சிறகுகள் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
Completed my dubbing for #AgniSiragugal today!! #Ranjith 💥 sure to capture your attention..💪🏼 Thank you @NaveenFilmmaker for etching such a lovely character..😘 pic.twitter.com/K999Kgifrv
— ArunVijay (@arunvijayno1) July 3, 2021