இது சாதாரண விஷயமல்ல, ரொம்பவே வலிக்குது: சமந்தா வருத்தம்
வலைதளங்களில் பதிவு செய்யப்படும் நெகடிவ் விமர்சனங்கள் சாதாரண விஷயம் அல்ல என்றும் அதனை பார்க்கும் போது மனம் ரொம்ப வலிக்கிறது என்றும் நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் சமந்தா நடித்த ’தி பேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் வெளியானது என்பதும் இந்த தொடர் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக சமந்தாவின் கேரக்டருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தனக்கு ஏற்பட்ட விமர்சனங்கள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ’சமூக வலைதளங்களில் சீண்டல்களை எதிர்கொள்வது என்பது சாதாரண விஷயம் அல்ல என்றும் நெட்டிசன்கள் ஏதோ சொல்லிவிட்டு போகட்டும் என்று சும்மா இருக்க முடியவில்லை என்றும் குறிப்பாக தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யும்போது மனம் ரொம்ப வலிக்கிறது என்று கூறியுள்ளார்
பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருப்பதால் இது போன்ற சோதனைகளை எளிதாக கடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறிய சமந்தா, தன்னம்பிக்கை காரணமாகவே சமூகவலைத்தள சீண்டல்களை சமாளித்து வருகிறேன்’ என்றும் இதுகுறித்து ஒரு சில நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.