படத்தில் இருந்து நீக்கி அவமானப்படுத்தினார்கள் : டாப்சி

படத்தில் இருந்து நீக்கி அவமானப்படுத்தினார்கள் : டாப்சி

ஆடுகளம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. அதன்பிறகு ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஹிந்தியில் பிங்க், பத்லா, நாம் சபானா, மிஷன் மங்கள், தப்பட் போன்ற படங்களில் நடித்து பிசியாகிவிட்டார். டாப்சியின் நடிப்பு ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது. இதையடுத்து அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் 'டூ-பாரா', 'லூப் லாபெட்டா', மற்றும் 'சபாஷ் மித்து' உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் டாப்சி கூறியிருப்பதாதாவது, 'நான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு தேதிகள் கொடுத்தேன். தேதிகள் கொடுத்தேனே தவிர படத்திற்காக தயாராகவில்லை. இந்நிலையில் என்னை அந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். என்னை நீக்கியதை படக்குழுவினர் என்னிடம் கூறவில்லை. நான் மீடியாக்கள் மூலம் தான் தெரிந்து கொண்டேன். படத்தில் இருந்து நீக்கியது குறித்து மீடியாக்கள் என்னிடம் கேட்டன. அதை பார்த்து படக்குழுவை சேர்ந்தவர்கள் எனக்கு போன் செய்தார்கள், சந்தித்து பேசினார்கள். நான் மீடியாவிடம் பேசிய பிறகே அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் என்னை படத்தில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை சொல்லவில்லை'.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES