காட்டுக்குள் ஸ்டைலிஷ் ரெட் குயின்… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வைரல் புகைப்படம்!

காட்டுக்குள் ஸ்டைலிஷ் ரெட் குயின்… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வைரல் புகைப்படம்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக ஸ்டைலிஷ் போட்டோஷுட் நடத்தி அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது காட்டுக்குள் போட்டோ ஷுட் நடத்தி இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிங்க் நிறத்தில் உடையணிந்து அதற்கு மேட்சாக ரெட் கலர் ஸ்டோல் அணிந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினமாவில் "அட்டக்கத்தி" திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், "பண்ணையாரும் பத்மினியும்", "காக்கமுட்டை", "திருடன் போலீஸ்", "கனா" போன்ற படங்களில் போல்டான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்கும் இவர் தற்போது அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். கூடவே சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துவரும் இவர் தொடர்ந்து ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்களை நடத்தி மார்டன் பெண்போல புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பதிவிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.

LATEST News

Trending News