கிருத்திகா உதயநிதி படத்தில் இணைந்த 4 பிரபலங்கள்: யார் யார் தெரியுமா?
வணக்கம் சென்னை, காளி ஆகிய திரைப்படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி அடுத்ததாக ஓடிடி பிளாட்பாரத்திற்கு ஆக ஒரு வெப்திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் பார்த்தோம். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் நாயகனாகவும் தன்யா ரவிசந்திரன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் மேலும் நான்கு பிரபலங்கள் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை பூர்ணிமா பாக்யராஜ், நடிகர் கருணாகரன், நடிகர் காளி வெங்கட் மற்றும் நடிகை விஜி சந்திரசேகர் ஆகிய நால்வர் இந்த படத்தில் இணைந்து உள்ளதாகவும் இன்னும் சிலரும் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம் நாதன் அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் இசையமைப்பாளர் உட்பட மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.