தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ள அவரது மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலி.. எந்த படத்தில் தெரியுமா
தமிழ் சினிமா உச்ச நட்சத்திரம், இந்தியளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தல அஜித்.
இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் வலிமை படத்தை முன்னணி இயக்குனர் எச். வினோத் இயக்கி வருகிறார்.
தல அஜித் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை, ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாலினிக்கு, ஒரு தங்கை மற்றும் ஒரு அண்ணன் இருக்கிறார்கள்.
இதில் ஷாலினியின் தங்கை ஷாமிலி, அஞ்சலி படத்தின் மூலம் பிரபலமானவர். இப்படத்திற்காக தேசிய விருதும் வென்றுள்ளார்.
இந்நிலையில் தனது அக்காவின் கணவர் நடிகர் அஜித்துடன் இணைந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஷாலிமி நடித்துள்ளார்.
ஆம் நடிகை தபு மற்றும் ஐஸ்வர்யா ராய்யின் தங்கை கதாபாத்திரத்தில் தான், இப்படத்தில் ஷாமிலி நடித்துள்ளார்.
இதோ அந்த காட்சியின் புகைப்படம்..