விக்ரம் படத்தில் இணைந்த மேலும் ஒரு முக்கிய நட்சத்திரம்! இத்தனை ஹீரோக்களா?

விக்ரம் படத்தில் இணைந்த மேலும் ஒரு முக்கிய நட்சத்திரம்! இத்தனை ஹீரோக்களா?

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் தான் விக்ரம்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னரே தொடங்கவிருந்து, ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை. 

இந்நிலையில் விக்ரம் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் இப்படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வந்தன. 

அந்த வகையில் தற்போது இப்படத்தில் நடிகர் நரேன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், கைதி படத்திற்கு பின் நடிகர் நரேன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

விக்ரம் படத்தில் ஏற்கனவே பாஹத் பாசில், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து தற்போது இவரும் இந்த படத்தில் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES