ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அவர்களின் தந்தை சிவன் என்பவர் சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது
.
பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சந்தோஷ் சிவனின் தந்தை சிவன். இவரும் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதும் பல மலையாளத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அவர்களின் தந்தை சிவன் சற்று முன்னர் மாரடைப்பு காரணமாக திருவனந்தபுரத்தில் காலமானார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சந்தோஷ் சிவன் குடும்பத்தினர்களுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பல திரையுலக பிரபலங்கள் காலமாகி வரும் நிலையில் இன்று மேலும் ஒரு திரையுலக பிரமுகர் காலமாகி இருப்பது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

LATEST News

Trending News