'பீஸ்ட்' படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு - நடிகர் விஜய்க்கு புதிதாக கிளம்பிய பிரச்சனை

'பீஸ்ட்' படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு - நடிகர் விஜய்க்கு புதிதாக கிளம்பிய பிரச்சனை

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 65வது படம் தான் பீஸ்ட். இப்படத்தின் First மற்றும் Second லுக் இரண்டுமே நேற்று மாலை அடுத்தடுத்து வெளியானது.

இன்று விஜய் பிறந்தநாள் என்பதினால்,அந்த போஸ்டரை விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துள்ளதாக கூறி புதிதாக எதிர்ப்பு ஒன்று வந்துள்ளது.

ஆம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் " நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன.

ஆனால் தமது தாய்மொழியான தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ?. Master, Bigil,படங்களை தொடர்ந்து Beast என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? " என தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES