'மாஸ்டர்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் சந்தானம்?
தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு வலதுகரமாக இருந்தவர் மேயாத மான், ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் என்பது தெரிந்தது. இவர் ’மாஸ்டர்’ படத்தின் திரைக்கதை அமைப்பு மற்றும் வசனத்திலும் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இயக்குனர் ரத்னகுமார் அடுத்ததாக சந்தானம் நடிக்கும் படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சந்தானம் தற்போது ’டிக்கிலோனா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்து ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படம் மற்றும் காமெடி கலந்த த்ரில் படம் என்றும் கூறப்படுகிறது.