விக்னேஷ் சிவனுக்கு நயன்தாராவுடன் இருக்கும் இந்த தருணம் தான் பிடிக்குமாம் - புகைப்படத்துடன் இதோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயந்தாரா, ரசிகர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள்.
கடைசியாக இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து இவர் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.
மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் இவர்கள் இருவரும் தனி விமானம் ஒன்றில் பயணம் செய்து கொச்சிக்கு வந்தனர், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வைரலானது.
இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராம் தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார் விக்னேஷ் சிவன். அப்போது ஒரு ரசிகர், "நயனுடன் நீங்கள் எடுத்த புகைப்படங்களில் பிடித்தது” எனக் கேட்டிருந்தார்.
அதற்கு விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.