அக்ஷாரா ஹாசன் நடிக்க இருந்த கதையில் ஸ்ருதிஹாசன் நடித்த படம் எது தெரியுமா?
இயக்குனர் ஹரி, படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சீட்டின் நுனியிலேயே உட்கார்ந்து படத்தை பார்க்க வைப்பவர்.
ரைமிங் வசனங்கள், விறுவிறுப்பான காட்சிகள், புள்ளி விவரங்கள் என அவரது படத்தில் சில விஷயங்கள் முக்கியமாக இருக்கும். அதிலும் அவர் இதுவரை இயக்கிய போலீஸ் கதைகள் தான் செம ஹிட்.
சூர்யாவை வைத்து சிங்கம் என 3 படங்கள் இயக்கிவிட்டார், அனைத்துமே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது சிங்கம் 3 குறித்து ஒரு சின்ன தகவல் இப்போது ரசிகர்களிடம் பேசப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க அக்ஷாரா ஹாசன் கமிட்டாகி இருக்கிறார், ஆனால் படத்தில் இருந்து அவர் சில காரணங்களால் வெளியேற அந்த வேடத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.