சிவாஜி கமல்ஹாசன் நடித்த இந்த படம் காப்பியா? காசு கொடுத்து சரிகட்டிய உலகநாயகனின் உண்மை முகம்..
தமிழ் சினிமாவில் 90 களிலேயே மிகப்பெரிய கூட்டணியில் வெளியாகி மாஸ்டர் பிளாஸ்டர் படமாக அமைந்தது தேவர் மகன். கலைஞானம் ரஜினிகாந்தின் பைரவி என்ற திரைப்படத்தின் கதை வசனம் எழுதி பிரபலமானார். இயக்குநர் பாக்ய ராஜின் பெரும்பாலான படங்களுக்கு இவரே கதை வசனகர்த்தாவாக இருந்தவர்.
1990 காலகட்டத்தில் தன்னுடைய முழு முயற்சியினால் கமலஹாசனை வைத்து இயக்கலாம் என்று கதையை கூறியுள்ளார் கலைஞானம். கலைஞானம் கூறிய கதையை கேட்டு கமலஹாசன் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லையாம். ஆனால் 2 வருடங்கள் கழித்து வெளிவந்த தேவர் மகன் படம் இவர் கூறிய அதே கதையாக இருந்ததாகவும், அப்படி இருக்க கமல் ஹாசன் தன் கதையை திருடி அப்படத்தில் வைத்துள்ளார் என்று, கமலுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
90-களில் அவர் கூறிய அதிவீர பாண்டியன் என்ற கதையைத்தான் தேவர் மகனாக பெயர் மாற்றி கமலஹாசன் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளார்கள். உண்மையை ஒத்துக்கொண்ட கமலஹாசன் மறுநாள் தனது அலுவலகத்திற்கு வரச் சொல்லியுள்ளார். அலுவலத்திற்கு சென்ற கலைஞானத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் காசோலை கொடுத்துள்ளார்.
ஆனால் கிட்டத்தட்ட 40 லட்சம் வரை நஷ்டயீடு கேட்டுள்ளார் கலைஞானம். ஆகையால் இந்த 25 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து விடுங்கள் என்று திருப்பிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம்.