சூர்யா, வெற்றிமாறன் வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட் - ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது ‘விடுதலை’ படம் உருவாகி வருகிறது.
சூரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதன்பின் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகவுள்ள படம் தான் வாடிவாசல்.இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து உருவாகிறது.
இப்படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறுகிய காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம்.