இதுதான் விஜய் பட டைட்டிலா? சமூக வலைத்தளத்தில் பரவும் விஜய்யின் புதிய படத்தின் பெயர்!

இதுதான் விஜய் பட டைட்டிலா? சமூக வலைத்தளத்தில் பரவும் விஜய்யின் புதிய படத்தின் பெயர்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பது தெரிந்ததே. லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பு தொடங்க அனுமதி கிடைத்தவுடன் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய்யின் பிறந்த நாள் இம்மாதம் 22ஆம் தேதி கொண்டாட இருப்பதை அடுத்து அன்றைய தினம் விஜய் நடித்துவரும் 65வது படத்தின் டைட்டில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் திடீரென விஜய்யின் 65 வது படத்தின் டைட்டில் ’டார்கெட்’ என்று வைரலாகி வருகிறது. இது குறித்த ரசிகர்களால் உருவாக்கப்பட்ட போஸ்டரும் வைரலாகி வருவதால் பலரும் இந்த டைட்டில் தான் விஜய்யின் அடுத்த பட டைட்டில் என்று பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இன்னும் படக்குழுவினர் டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES