கொரோனாவுக்கு பலியான தமிழ் திரைப்பட நாயகன்: அதிர்ச்சியில் திரையுலகம்

கொரோனாவுக்கு பலியான தமிழ் திரைப்பட நாயகன்: அதிர்ச்சியில் திரையுலகம்

கடந்த சில வாரங்களாகவே தமிழ் திரையுலகை சேர்ந்த சிலர் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பாக இயக்குநர் கேவி ஆனந்த், இயக்குனர் தாமிரா உள்ளிட்ட பலரும் உயிரிழந்து வருவதால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’தொரட்டி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகை ஷமன் மித்ரு இன்று காலை கொரோனாவுக்கு உயிரிழந்ததாக வந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ஷமன் மித்ரு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழ் திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஷமன் மித்ரு நடித்த ’தொரட்டி’ திரைப்படம் விமர்சன ரீதியில் வெகுவாக பாராட்டப்பட்டது என்பதும் இதனை அடுத்து அவருக்கு படவாய்ப்புகளும் குவிந்த வந்த நிலையில் திடீரென அவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES